பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துகொள்ளும் கட்டமைப்பு கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட்து.
ஹைட்ரோ கார்பன் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தி அதனை விரிவுபடுத்தி இருநாடுகளுக்கும் சம மற்றும் பரஸ்பர பயன்கள் கிடைக்கும் வகையில் ஒத்துழைப்பு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதன் நோக்கமாகும்.
புரிதலுக்கான இந்த கட்டமைப்பு ஒப்பந்தம் துணை பிராந்திய மற்றும் பிராந்திய மட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும். இது வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன் இரு நாடுகளும் தங்களது வளர்ச்சிக்கான விருப்பங்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட விதி மற்றும் அமைதியான, வளாமான தெற்காசிய என்ற பொது தொலைநோக்கு பார்வையை நனவாக்க வகை செய்யும்.
இந்த புரிதலுக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் இயல்பில் நிபந்தனை அற்றதாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகவும் இருக்கும்.