Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து


20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இப்போட்டியில் 10 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணியினரை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

இந்த வரலாற்றுச் சாதனைஇந்தியாவின் இளம் தடகள வீரர்களின் மன உறுதியையும்அவர்களின் தனித்துவமான திறமையையும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த மகத்தான சாதனைகள்வரும் ஆண்டுகளில் மேலும் பல இளம் இந்தியர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடவும்சாதிக்கவும் ஊக்குவிக்கும் என்றும் அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பாதாவது:

“20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த சிறப்பான செயல்திறன்  நமது இளம் தடகள வீரர்களின் மன உறுதியையும்தனித்திறமையையும் காட்டுகிறது. இந்த சாதனைகள் வரும் ஆண்டுகளில் இன்னும் பல இளம் இந்தியர்களை விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளிக்கட்டும்.”

***

(Release ID: 2267418)
SS/EA/RJ