பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தொழிற்சாலைகள் (திருத்த) மசோதா 2016ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழிற்சாலைகள் சட்டம் 1948ல் 64, 65வது பிரிவை திருத்தி அமைக்கவும், 115வது பிரிவை விளைவுசார்ந்து திருத்தி அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கப்பட்டுள்ள திருத்தங்கள் உற்பத்தி துறைக்கு புதிய ஊக்கம் அளிப்பதாகவும், வேலைவாய்ப்புகளை பெருக்கும் விதத்திலும் இருக்கும்.
காலாண்டுக்கு 50மணி நேரம் என பிரிவு 64ல் இருக்கும் நிலையை திருத்தி 100மணி நேரமாக உயர்த்தியும், பிரிவு 75ல் இருக்கும் 75மணி நேரத்தை 125மணி நேரமாக உயர்த்தியும் திருத்தப்பட்டுள்ளது.