பி.எம்.இந்தியா
வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்த கிராமத் தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த உரையாடலின் போது, கிராம தலைவர்கள் குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வருவதையும், மதிய உணவின் தரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், தங்கள் கிராமங்களை அவர்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற வேறுபாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.