Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன – பிரதமர்


முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கு உலக நாடுகள் ஆர்வம் காட்டிவருவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  சிறந்த உலகை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தில் பங்கேற்க இந்தியா தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதால் உலக நாடுகள் இந்தியா மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார். இதன் காரணமாகவே முதலீடுகளைச் செய்வதற்கும் பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கும் உலக நாடுகள் விரும்புவதாக அவர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“சிறந்த உலகை உருவாக்கும் முன்முயற்சிகளில் சாத்தியமுள்ள வழிகளில் இந்தியா பங்களிப்பை அளிக்க எப்போதும் தயாராக உள்ளது. அதே வேளையில் உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தபோதிலும், உலக நாடுகள் இந்தியா மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கும் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் ஆர்வமுடன் உள்ளன.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275098&reg=3&lang=1    

***

TV/SV/KPG/RJ