பி.எம்.இந்தியா
கொல்கத்தாவில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசு இரவு பகலாகப் பணியாற்றி வருவதாகத் திரு மோடி உறுதியளித்தார்.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டிருப்பதாவது:
“கொல்கத்தாவில் நேற்று நேரிட்ட விபத்து வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் நிதியுதவியாக வழங்கப்படும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசு இரவு பகலாகப் பணியாற்றி வருகிறது.”
***
(Release ID: 2277624)
SS/SV/RJ
The mishap in Kolkata yesterday is saddening. An ex-gratia of Rs. 2 lakh each will be given from PMNRF to the next of kin of those who lost their lives in the mishap. The injured would be given Rs. 50,000. The state government is working round the clock to ensure that those…
— PMO India (@PMOIndia) June 25, 2026
গতকাল কলকাতায় ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এককালীন সহায়তা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে । ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে সব ধরনের সম্ভাব্য…
— PMO India (@PMOIndia) June 25, 2026