பி.எம்.இந்தியா
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நேரிட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருடனும் துணை நிற்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான தருணத்தில், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நேரிட்ட பேரழிவு குறித்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
இந்திய மக்கள் சார்பில், அந்நாட்டு அரசு, மக்களுக்கு, குறிப்பாகத் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையப் பிரார்த்திப்பதுடன், இந்த இக்கட்டான தருணத்தில், பாதிக்கபட்டுள்ள அனைவருடனும் இந்தியா துணை நிற்கும்.
சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.
***
(Release ID: 2277621)
SS/SV/RJ
Deeply saddened by the devastation caused by the severe earthquakes in Venezuela.
— Narendra Modi (@narendramodi) June 25, 2026
On behalf of the people of India, I extend our heartfelt condolences to the Government and people of Venezuela, especially to the families who have lost their loved ones. We pray for the speedy…