Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தவத் திரு பிரமுக் சுவாமி மகாராஜ் மறைவு; பிரதமர் இரங்கல்சரங்பூரில் பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார்


தவத் திரு பிரமுக் சுவாமி மகாராஜ் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தவத் திரு பிரமுக் சுவாமி மகாராஜ் உடன் தான் கொண்ட உரையாடல்களை நினைவு கூறிய பிரதமர், சுவாமி எனக்கு குருவாக திகழ்ந்தார். அவருடைய சேவையை சமூகம் எப்போதும் நினைவு கொள்ளும்.

தில்லியில் உள்ள செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பின் குஜராத் மாநிலம் சாரங்பூரில் தவத் திரு பிரமுக் சுவாமி மகாராஜுக்கு பிரதமர் நாளை இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார்.

தவத் திரு பிரமுக் சுவாமி மகாராஜ் அன்பும் எளிமையும் கொண்ட சிறந்த மனிதராக விளங்கினார். அவருடைய சேவையை சமூகம் எப்போதும் நினைவு கொள்ளும்.

தவத் திரு பிரமுக் சுவாமி மகாராஜ் எனக்கு குருவாக திகழ்ந்தார். அவருடன் நான் கொண்ட உரையாடல்களை ஒருப்போதும் மறக்க மாட்டேன். அவரை இழந்து தவிப்பேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.