Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரியோ ஒலிம்பிக்சில் சாக்ஷி மாலிக்கிற்கு வெண்கலப் பதக்கம் – பிரதமர் வாழ்த்து


ரியோ ஒலிம்பிக்சில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற செல்வி மாலிக்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

செல்வி மாலிக் வரலாறு படைத்து உள்ளார்! அவர் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு எனது வாழ்த்துகள். தேசமே இந்த வெற்றியை கொண்டாடுகிறது.

ரக்ஷா பந்தன் திருநாள் அன்று, இந்தியாவின் மகள் வெண்கலப்பதக்கம் வென்று நம் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வரும் ஆண்டுகளில் சாக்ஷி மாலிக் பல வீரர்களை ஊக்குவிப்பார் என்று நம்புவதாக பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

***