Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரீஸ் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை பின் தேதியிட்ட ஒப்புதல் அளித்தது.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அக்டோபர் 2, 2016 காந்தி ஜெயந்தி அன்று ஒப்புதல் அளித்துள்ளது

பாரீஸ் ஒப்பந்தம் 185 நாடுகளால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியா இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி நியுயார்க்கில் வைத்து பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதுவரை 191 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி ஒட்டுமொத்த உலகளாவிய வெளியிடுதலில் 55% வெளியீடு 55 நாடுகளில் இருந்தே வருகின்றது. இதுவரை 61 நாடுகள் தங்கள் உறுதியையும், ஒப்புதலையும் கொடுத்துள்ளதன் மூலம் 47.79% உலகளாவிய பசுமைகுடில் வாயுக்களுக்கான கணக்கு தெரியவந்துள்ளது.

பாரீஸ் ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றபின் நாடுகள் வெளிப்படுத்தும் வெளியீடு வாயுக்களின் ஒட்டுமொத்த கணக்கு 51.86%ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை பல நாடுகள் ஏற்கும் என்பது பல்வேறு நாடுகளும் இதில் காட்டிவரும் ஆர்வம் உறுதிசெய்கிறது. இதன்மூலம் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் விரைவில் அமலுக்கு வருவதன் மூலம் உலகநாடுகள் பருவநிலை மாற்றத்திற்கெதிரான வலுவான நடவடிக்கைகளில் இறங்க உதவும்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்பதன்மூலம் பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். பாரீஸ் ஒப்பந்தத்தில் சர்வதேச நாடுகளின் ஒப்புதலை பெறுவதில் இந்தியா காட்டிய ஆர்வமும், இன்று எடுக்கப்பட்டுள்ள முடிவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்காகவும் திரண்டுள்ள உலக நாடுகளின் மத்தியில் இந்தியா தலைமைப்பண்புடன் விளங்குவதை எடுத்துரைக்கிறது.

பாரீஸ் ஒப்பந்தத்தை ஏற்க உறுதியேற்றுள்ள அதே நேரம், இந்தியா அதன் தேசிய சட்டங்கள், மேம்பாட்டு கொள்கைகள், நடைமுறைப்படுத்தும் முறைகள், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் உலகநாடுகள் காட்டும் உறுதியை ஆய்வு செய்தல், யூகிக்கத்தக்க, தாங்கத்தக்க தூய சக்தியை பெறும்வழி, ஆகியவை ஒப்பந்தத்தை சார்ந்து இருக்கவேண்டுமென்றும் அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்கு பின்பான பருவநிலை மாற்றத்தை சார்ந்தே பாரீஸ் ஒப்பந்தம் அமைந்துள்ளது. 2020க்கு முன்பான காலகட்டங்களில் வளர்ந்த நாடுகள் கியோடோ ஒப்பந்தத்தின்படி செயல்படும் அதே நேரம், வளரும் நாடுகள் சிலவும் தன்னார்வ உறுதிமொழியை ஏற்றுள்ளன.