பி.எம்.இந்தியா
இன்று (28.06.2026) மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். நமது தேச வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தில், நாட்டின் முன்னேற்றத்திற்கு பி.வி. நரசிம்ம ராவ் நிலையான பங்களிப்புகளை ஆற்றியுள்ளார் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது தேச வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தில், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் நிலையான பங்களிப்புகளை அளித்தார். அவர் ஒரு திறமையான நிர்வாகியாகத் தடம் பதித்தார். மேலும், இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் குறித்த அளவற்ற அறிவும் புரிதலும் பெற்ற ஒரு தலைசிறந்த அறிஞராகவும் அவர் திகழ்ந்தார்.”
****
(Release ID: 2278552)
TV/PLM/RJ
Tributes to former Prime Minister Shri PV Narasimha Rao Ji on his birth anniversary. He made enduring contributions to India’s progress during a critical phase of our nation’s history. He made a mark as an able administrator. He was also a distinguished scholar, blessed with…
— Narendra Modi (@narendramodi) June 28, 2026