பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் எழுதிய ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
லட்சாதிபதி சகோதரி முன்முயற்சி திட்டம், கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருந்து வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்கும், நிலையான வருவாயை அடைவதற்கும், மிகப்பெரிய அளவில் பொருளாதார சுதந்திரத்தை பெறுவதற்கும் எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த கட்டுரை விவரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். திறன்கள், நிதி, சந்தைகள், சமூக நிறுவனங்களுக்கான அணுகல் ஆகியவை நிறுவனங்களை மகளிர் உருவாக்கவும், பொருளாதார முடிவுகளை எடுக்கவும், தங்களது எதிர்காலத்தை தாங்களே வடிவமைக்கவும் எவ்வாறு உதவுகின்றன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
இது தொடர்பாக, சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“சுய உதவிக்குழுக்களிலிருந்து வெற்றிகரமான தொழில்முனைவோராக கிராமப்புற மகளிர் அதிகாரமளித்தலின் ஒரு புதிய கதையை உருவாக்குகிறார்கள்!
லட்சாதிபதி சகோதரி முன்முயற்சி திட்டம், கிராமப்புற மகளிர் நிலையான வருவாய், மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை நோக்கி நகருவதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் எழுதியுள்ளார். திறன்கள், நிதி, சந்தைகள், சமூக நிறுவனங்களுக்கான அணுகல் ஆகியவை நிறுவனங்களை மகளிர் உருவாக்கவும், பொருளாதார முடிவுகளை எடுக்கவும், தங்களது எதிர்காலத்தை தாங்களே வடிவமைக்கவும் எவ்வாறு உதவுகின்றன என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336908®=3&lang=1
***
SS/LN/SH
From self-help groups to successful entrepreneurs, rural women are shaping a new story of empowerment! Former Rural Development Secretary Shri Shailesh Kumar Singh writes about how the Lakhpati Didi initiative is helping rural women move towards sustainable incomes and greater economic independence. He highlights how skills, access to finance, markets and community institutions are enabling women to build enterprises, make economic decisions and shape their own futures. https://t.co/5i0uWH47yj
— PMO India (@PMOIndia) November 16, 2026