Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் எழுதிய கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத் ஸ்ரீதர பணிக்கர் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

பிரதமரின் தலைமைத்துவம், தெளிவான தேசிய தொலைநோக்குப் பார்வை ஆகியவை இந்திய விண்வெளி லட்சியங்களை நனவாக்க எவ்வாறு உதவின என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது. விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய விண்வெளி கொள்கை-2023 கொண்டுவரப்பட்டதின் முக்கியத்துவத்தை இந்த கட்டுரை எடுத்துரைக்கிறது. மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம், பாரதிய விண்வெளி நிலையம், நிலவை ஆழமாக ஆய்வு செய்யும் திட்டங்கள் உள்ளிட்ட இந்தியாவின் எதிர்கால திட்டங்களுக்கான வரைபடம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“நிலவை நோக்கிய ஒரு பிரம்மாண்டமானப் பாய்ச்சல்; விண்வெளியில் இந்தியாவின் எதிர்காலத்திற்கான இன்னும் மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை!

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவம், தெளிவான தேசிய தொலைநோக்குப் பார்வை ஆகியவை இந்திய விண்வெளி லட்சியங்களை நனவாக்க எவ்வாறு உதவின என்பதை முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத் ஸ்ரீதர பணிக்கர் பகிர்ந்துள்ளார். விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய விண்வெளிக் கொள்கை-2023 கொண்டுவரப்பட்டதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம், பாரதிய விண்வெளி நிலையம், நிலவை ஆழமாக ஆய்வு செய்யும் திட்டங்கள் உள்ளிட்ட இந்தியாவின் எதிர்கால திட்டங்களுக்கான வரைபடம் குறித்தும் விவாதித்துள்ளார்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336909&reg=3&lang=1

***

SS/LN/SH