Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாராணாசி அருகே ராஜ்காட் பாலத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


உத்தரபிரதேசம், வாராணாசி மற்றும் சண்டவுளி இடையேயான ராஜ்காட் பாலத்தில் 15.05.2016 அன்று ஏற்பட்ட கூட்டநெரிசலின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“வாராணாசியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் உயிரிழந்தர்களை எண்ணி ஆழ்ந்த சோகத்தில் உள்ளேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபாங்கள். காயமடைந்தவர்களுக்கு எனது பிரார்த்தனைகள்.

வாராணாசியில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கிட அலுவலர்களிடம் நான் பேசியுள்ளேன்”, என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.2/- லட்சமும், காயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000/- வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.