Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையே தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையே தகவல்-தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான தனது ஒப்புதலை வழங்கியது.

இந்த இரு நாடுகளின் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றுக்கு உகந்த வகையில் தகவல்-தொழில்நுட்பத் துறையில் சமத்துவம், பரஸ்பர நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்ட காலஅளவிற்கான, நீடித்த வகையிலான ஒத்துழைப்பை உருவாக்குவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டதாகும். இதைச் செயல்படுத்துவதன் மூலம் தகவல்-தொழில்நுட்பம், மனித வள மேம்பாடு ஆகிய துறைகளில் திறன்களை வளர்ப்பது, நிறுவன ரீதியாக வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் தகவல்-தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க வகையில் பரஸ்பர நலன்களுக்கு வழிவகுக்கும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையே எழுத்து பூர்வமான ஒப்புதலின் மூலம் இந்த ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொள்ள முடியும். இந்த இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் தகவல்-தொழில்நுட்பத்திற்கான கூட்டுச் செயலாக்கக் குழு ஒன்றை உருவாக்குவதன் மூலம் இது செயல்படுத்தப்படும்.