Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வடகிழக்கு தில்லி தயால்பூர் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்


வடகிழக்கு தில்லி தயால்பூர் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்  வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு தில்லியின் தயால்பூர் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi

****

(Release ID: 2122975)

BK/SG