பி.எம்.இந்தியா
புகழ்பெற்ற டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் 100-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதைச் செலுத்தியுள்ளார்.
டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் குரல், அசாமின் ஆன்மாவையும் வடகிழக்குப் பிராந்தியத்தின் உணர்வையும் நாடுமுழுவதும் கொண்டுச் சேர்த்தது என்று பிரதமர் கூறியுள்ளார். தனது இசை மூலம் எண்ணற்ற மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் டாக்டர் ஹசாரிகா அழகாக வெளிப்படுத்தியதோடு மக்களை ஒன்றிணைத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குவஹாத்தியில் கடந்த ஆண்டு நடைபெற்ற டாக்டர் ஹசாரிகாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதை திரு மோடி அன்புடன் நினைவு கூர்ந்தார்.
பூபேன் தாவின் வாழ்க்கை முறையும் பணிகளும் பல தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
“புகழ்பெற்ற டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் 100-வது பிறந்த தினத்தில் நினைவு கூருகிறேன்.
அவரது குரல், அசாமின் ஆன்மாவையும் வடகிழக்குப் பிராந்தியத்தின் உணர்வையும் நாடுமுழுவதும் கொண்டு சேர்த்தது.
தனது இசை மூலம் எண்ணற்ற மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் டாக்டர் ஹசாரிகா அழகாக வெளிப்படுத்தினார். அவரது பாடல்கள் மக்களை ஒன்றிணைத்தது.
குவஹாத்தியில் கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை நான் அன்புடன் நினைவு கூருகிறேன்.
பூபேன் தாவின் வாழ்க்கை முறையும் பணிகளும் பல தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.”
***
(Release ID: 2307731)
TV/IR/SM/GS
On his 100th birth anniversary, remembering the legendary Dr. Bhupen Hazarika Ji.
— Narendra Modi (@narendramodi) September 8, 2026
His voice carried the soul of Assam and the spirit of the Northeast to the entire nation.
Through his music he beautifully gave expression to the thoughts and spirit of countless people. His… pic.twitter.com/92YZ7B52ld
কিংবদন্তি ড° ভূপেন হাজৰিকা দেৱক তেখেতৰ জন্ম শতবাৰ্ষিকীত শ্ৰদ্ধাৰে সুঁৱৰিছোঁ।
— Narendra Modi (@narendramodi) September 8, 2026
তেখেতৰ কণ্ঠই সমগ্ৰ দেশবাসীৰ ওচৰলৈ অসমৰ আত্মা আৰু উত্তৰ-পূৰ্বাঞ্চলৰ স্বাভিমান বহন কৰিছিল।
সংগীতৰ জৰিয়তে তেখেতে অগণন জনগণৰ চিন্তা আৰু ভাৱনাক সুন্দৰভাৱে প্ৰকাশ কৰিছিল। তেখেতৰ গীতে মানুহক অধিক ওচৰ চপাই… pic.twitter.com/4L9q9PmGQn