Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கற்பித்தலை படைப்பாற்றல்மிக்கதாகவும் நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் பங்களிப்பவர்களாகவும் அங்கீகரிக்கும் மத்திய இணையமைச்சரின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


மத்திய இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

கற்பித்தல் பணி என்பது ஒரு கலை என்றும்  படைப்பாற்றல்மிக்கது என்றும் அதற்கு மனித உறவுகள், கற்பிக்கும் முறைகள், மாணவர்களிடமுள்ள திறன்களை கண்டறியும் திறமை ஆகியவை தேவையென்றும் மத்திய இணையமைச்சர் எழுதியுள்ளதை பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆசிரியரையும் தேசத்தை கட்டமைப்பதில் பங்காற்றுபவர்களாக அங்கீகரிக்கும் அதே வேளையில் தேசிய கல்விக் கொள்கை 2020, உல்லாஸ், வித்யாஞ்சலி மற்றும் பல்வேறு இதர முன்முயற்சிகள் எவ்வாறு கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை வலுப்படுத்துகின்றன என்பதை இக்கட்டுரை எடுத்துரைப்பதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

கற்பித்தல் பணி என்பது ஒரு கலை என்றும்,  படைப்பாற்றல்மிக்கது என்றும் அதற்கு மனித உறவுகள், கற்பிக்கும் முறைகள், மாணவர்களிடமுள்ள திறன்களை கண்டறியும் திறமை ஆகியவை தேவையென்றும் மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி எழுதியுள்ளார்.

ஒவ்வொரு ஆசிரியரையும் தேசத்தை கட்டமைப்பதில் பங்காற்றுபவர்களாக அங்கீகரிக்கும் அதே வேளையில் தேசிய கல்விக் கொள்கை 2020, உல்லாஸ், வித்யாஞ்சலி மற்றும் பல்வேறு இதர முன்முயற்சிகள் எவ்வாறு கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை வலுப்படுத்துகின்றன என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.

***

(Release ID: 2307386)

TV/IR/PS/SH