Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோர் பிரதமரைச் சந்தித்தார்


இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோர், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.

திரு கோரின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், அவரது பதவிக்காலம் இந்தியாஅமெரிக்கா இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோரை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவரது பதவிக்காலம் இந்தியாஅமெரிக்கா இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். @SergioGor”

***

(Release ID: 2177946)

AD/PLM/SG