Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கத்தார் நாட்டின் தந்தை அமீர் மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


பிரதமர் திரு நரேந்திர மோடி, கத்தார் நாட்டின் தந்தை அமீர் மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கத்தாரை பெரும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் வழிநடத்திய ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று அவரை பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2024 பிப்ரவரியில் கத்தாருக்குத் தாம் மேற்கொண்ட பயணத்தின்போது அவரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததாக திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

கத்தார் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், முழு அரச குடும்பத்தினருக்கும் கத்தார் மக்களுக்கும் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

“கத்தார் நாட்டின் தந்தை அமீர், ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். கத்தாரை பெரும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் வழிநடத்திய ஒரு தொலைநோக்குத் தலைவரான அவரை, 2024 பிப்ரவரியில் நான் கத்தாருக்குப் பயணம் மேற்கொண்டபோது சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்.  ஒரு உண்மையான நண்பராக அவரை நினைவுகூர்கிறேன். கத்தார் அமீர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், கத்தார் அரச குடும்பத்தினருக்கும், கத்தார் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

****

(Release ID: 2283856)

TV/PLM/RJ