பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் சேவா தீர்த்தம் மற்றும் கடமை மாளிகை-1 & 2 ஆகியவற்றின் தொடக்க நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், அனைவரும் ஒரு புதிய வரலாற்றைக் காண்கிறோம் என்று குறிப்பிட்டார். பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், பல்வேறு துறைகளின் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் சேவா தீர்த்தம் மற்றும் புதிய கட்டிடங்கள் திறக்கப்படுவதற்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவற்றின் கட்டுமானத்தில் தொடர்புடைய அனைத்து பொறியாளர்கள், தொழிலாளர் சக ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடனும், மக்களே கடவுள் என்ற புனித உணர்வுடனும், சேவா தீர்த்தம் பணிவுடன் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.”
“சேவா தீர்த்தம் எப்போதும் கடமை, கருணை, தேசமே முதன்மையானது என்ற கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழட்டும். இது தன்னலமற்ற சேவைக்காகவும் அனைவரின் நலனுக்காகவும் அயராத பாடுபட ஊக்கமளிக்கட்டும்.”
“சேவா தீர்த்தத்தில், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், நமது கடின உழைப்பாளி விவசாயிகள், இளைஞர் சக்தி, பெண் சக்தி ஆகியோருக்கு அதிகாரமளிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திடப்பட்டது. முக்கிய முடிவுகளில் பின்வருவன அடங்கும்:”
“விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கும் பிரதமரின் ரஹத் (PM RAHAT) திட்டத்தைத் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது பாதிக்கப்பட்ட எவருக்கும் உடனடி மருத்துவ உதவி வழங்கப்படுவதை உறுதி செய்யும்.”
“லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல். இது பெண்களுக்கு அதிகாரமளித்து அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.”
“வேளாண் உள்கட்டமைப்பு நிதி இலக்கு 1 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2 லட்சம் கோடி ரூபாயாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இது நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.”
“10,000 கோடி ரூபாய் மூலதனத்துடன் கூடிய ஸ்டார்ட்அப் இந்தியா நிதயங்களின் நிதியம் 2.0-க்கு ஒப்புதல். இது புத்தொழில் நிறுவனங்கள் ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும்.”
“நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடனும், ‘மக்களே கடவுள்‘ என்ற புனித உணர்வுடனும், ‘சேவா தீர்த்தத்தை‘ தேசத்திற்கு அர்ப்பணிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது.
‘சேவா தீர்த்தம்‘ என்பது கடமை, கருணை ‘தேசமே முதலில்‘ என்ற கொள்கைகளுக்கான நமது உறுதிப்பாட்டின் சக்திவாய்ந்த அடையாளமாகும்.
“அடுத்த தலைமுறையினருக்கு இது தொடர்ந்து உத்வேகத்தைத் தரட்டும்.”
“தில்லியில் ‘சேவா தீர்த்தம், கடமை மாளிகை திறப்பு விழாவை முன்னிட்டு சேவா தீர்த்த நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் வெளியிட்டதில் பெருமை கொள்கிறேன்.”
“சேவா தீர்த்தம், கடமை மாளிகை ஆகியவள்றை நாட்டுக்கு அர்ப்பணித்த நிஎநலையில், அவை நாட்டு மக்கள் 140 கோடிப் பேரின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கான வலுவான அடித்தளமாக மாறும்.”
“கடந்த 11 ஆண்டுகளாக, அடிமைத்தனத்தின் மனநிலையை மாற்றுவதற்கான இயக்கத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். எங்கள் மந்திரம் – சுதந்திர இந்தியாவின் சுதந்திர அடையாளம்!”
“‘சேவா தீர்த்தம்‘ என்ற பெயரே ஒரு சக்திவாய்ந்த செய்தியைக் கொண்டுள்ளது. நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் உறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரு புனிதமான இடம்!”
“கடமை என்பது இந்த துடிப்பான தேசத்தின் உயிர்நாடி. நாட்டு மக்கள் கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை நனவாக்கும் நமது உறுதிப்பாட்டிற்கு இது புதிய சக்தியை அளிக்கிறது.”
“‘மக்களே கடவுள் என்பது எங்கள் பணி கலாச்சாரம். ‘சேவா தீர்த்தத்தில்‘ எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் நாட்டு மக்கள் 140 கோடி பேரின் வாழ்க்கையை மேம்படுத்தும்.”
***
(Release ID: 2227895)
TV/PLM/RJ
With an unwavering resolve to serve the people of India and guided by the sacred spirit of Nagrikdevo Bhava, Seva Teerth is humbly dedicated to the nation.
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
May Seva Teerth always stand as a radiant symbol of duty, compassion, commitment to the principle of India First. May it… pic.twitter.com/xVRoEcbtE9
At Seva Teerth earlier today, signed files that are connected with the empowerment of the poor, downtrodden, our hardworking farmers, Yuva Shakti and Nari Shakti. The key decisions include:
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
Approval for the launch of PM RAHAT scheme, as per which victims of accidents will get… pic.twitter.com/dVn5LyrVNX
देशवासियों की सेवा के अटूट संकल्प और 'नागरिक देवो भव' की पावन भावना को साथ लेकर, आज ‘सेवा तीर्थ’ को राष्ट्र को समर्पित करने का सौभाग्य मिला।
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
‘सेवा तीर्थ’ कर्तव्य, करुणा और ‘राष्ट्र प्रथम’ के लिए हमारी प्रतिबद्धता का सशक्त प्रतीक है।
मेरी कामना है कि यह आने वाली पीढ़ियों को… pic.twitter.com/YWYUuSHtsD
दिल्ली में आज 'सेवा तीर्थ' और कर्तव्य भवन के लोकार्पण के अवसर पर सेवा तीर्थ स्मारक डाक टिकट और सिक्का जारी कर गौरवान्वित हूं। pic.twitter.com/r130HzBnYe
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
आज मैंने जिस अमृत भावना के साथ 'सेवा तीर्थ' और कर्तव्य भवन को राष्ट्र को समर्पित किया है, वो 140 करोड़ देशवासियों की आकांक्षाओं और अपेक्षाओं को पूरा करने का सशक्त आधार बनेंगे। pic.twitter.com/HMdsvwlb4B
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
बीते 11 वर्षों से हम गुलामी की मानसिकता को बदलने के अभियान में जुटे हैं। हमारा मंत्र है- स्वतंत्र भारत की स्वतंत्र पहचान, गुलामी से मुक्त निशान! pic.twitter.com/ITbaLp9mCG
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
'सेवा तीर्थ' के नाम में ही एक बड़ा संदेश है- देशवासियों की सेवा के संकल्प को सिद्धि तक ले जाने का एक पावन स्थल! pic.twitter.com/01HE9ntZWA
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
कर्तव्य इस जीवंत राष्ट्र की प्राण वायु है। यह कोटि-कोटि देशवासियों के सपनों को साकार करने के हमारे संकल्प को नई ऊर्जा दे रहा है। pic.twitter.com/W7ffr9w3qT
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
‘नागरिकदेवो भव’ हमारी कार्य-संस्कृति है। 'सेवा तीर्थ' में लिया गया हर निर्णय 140 करोड़ देशवासियों के जीवन को और बेहतर बनाएगा। pic.twitter.com/AczyYzFSrO
— Narendra Modi (@narendramodi) February 13, 2026