பி.எம்.இந்தியா
ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் உரையாடிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.
இந்த உரையாடலின் போது, ஓமனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படுவதற்கு பிரதமர் கண்டனம் தெரிவித்தார். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு நிலையான ராஜதந்திர நடவடிக்கையின் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இந்திய சமூகத்திற்கு ஓமன் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவையும் பிரதமர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் குறிப்பிட்டதாவது:
“மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் உரையாடியதுடன், எனது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டேன். ஓமனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தேன். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு நிலையான ராஜதந்திர செயல்பாட்டின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தினோம். இந்திய சமூகத்திற்கு ஓமன் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்குப் பாராட்டு தெரிவித்தேன்.
@SultanHaithamb1”
(Release ID: 2235112)
****
TV/BR/SH
Spoke with His Majesty Sultan Haitham bin Tarik and exchanged views on recent developments in West Asia. Condemned the violation of Oman’s sovereignty and territorial integrity. We agreed that sustained diplomatic engagement is essential for earliest restoration of regional peace…
— Narendra Modi (@narendramodi) March 3, 2026