Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொலம்பியா நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவிற்குப் பிரதமர் வாழ்த்து


கொலம்பியா நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து வளர்ந்து வரும் கொலம்பியா நாட்டுடனான நெருங்கிய நட்புறவில் இந்தியா பெரும் மதிப்பு கொண்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். “அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கூறியுள்ளார். வரும் ஆண்டுகளில், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும்,” என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

கொலம்பியா நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து வளர்ந்து வரும் கொலம்பியா நாட்டுடனான நெருங்கிய நட்புறவின் மீது இந்தியா பெரும் மதிப்பு வைத்துள்ளது. உங்கள் பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகளில், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278332&reg=3&lang=1

****

TV/SV/RJ