Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜல் ஜீவன் இயக்கத்தை 2028 டிசம்பர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கூடிய மத்திய அமைச்சரவை, ஜல் சக்தி அமைச்சகம் முன்மொழிந்த ஜல்ஜீவன் இயக்கத்தின்  செயல்பாட்டை கட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து சேவை வழங்கல் மையமாக மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதற்காக மொத்த செலவீனம் ரூ8.69 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், மத்திய நிதியுதவி ரூ 3.59 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

“சுஜலம் பாரத் ” எனும் தேசிய டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ், ஒவ்வொரு கிராமத்துக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு, குடிநீர் வழங்கல் அமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவது இதன் நோக்கமாகும். 

2019-இல் 3.23 கோடி கிராமப்புற குடும்பங்களில் 17% பேர் குடிநீர் குழாய்  இணைப்பைப் பெற்றிருந்தனர்; இதுவரை 12.56 கோடி கூடுதல் குடும்பங்களுக்கு ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 19.36 கோடி கிராமப்புற குடும்பங்களில் சுமார் 15.80 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைக்கிறது.

ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் பெண்கள் நீர் எடுத்துச் செல்லும் வேலையிலிருந்து விடுபட்டு, வேலை மற்றும் கல்வியில் அதிக பங்கு பெற முடிந்துள்ளது.  தினசரி 5.5 கோடி மணி நேரம் வேலை மிச்சமாகியுள்ளது. 400,000 குடல் தொற்று மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நோபல் பரிசு வென்ற மைக்கேல் கிரெமர் குழந்தை மரணங்களில் 30% குறைவு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

ஜல்ஜீவன் இயக்கத்தின் 2.0 திட்டத்தின் மூலம் 2028 டிசம்பர் வரை நாட்டின் அனைத்து 19.36 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் குடிநீர்  இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் குடிநீர் சேவைகள் நிலைத்திருக்கும் முறையில், குடிமக்கள் மையமாக வழங்கப்படும். ஜல்ஜீவன் இயக்கத்தின் 2.0 திட்டம், வளர்ந்த பாரதம்  @2047 நோக்கத்துடன் கிராமப்புற நீர்ப்பாசன சேவையை 24×7 அடிப்படையில் வழங்கும் விதத்தில் செயல்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237548&reg=3&lang=1

****

TV/PKV/SH