பி.எம்.இந்தியா
நாட்டின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் முப்படைகளின் துணிச்சலும், வீரமும் நாட்டின் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய அன்னைக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அவர்களது உணர்வு அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார். ஒருவர் தமது கடமையை உணரும் போது மனதில் எந்தவிதமான தயக்கமோ அச்சமோ இருக்கக் கூடாது என்று அந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதியையும், கண்ணியத்தையும் காக்க மேற்கொள்ளப்படும் போராட்டம் வீரர்களுக்கு மிகச் சிறப்பான தன்மையை வழங்கும் என்றும் அந்த ஸ்லோகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258947®=3&lang=1
***
SS/PLM/KPG/KR
देश के मान-सम्मान की रक्षा के लिए भारतीय सेना का शौर्य और पराक्रम सभी देशवासियों को गौरवान्वित करता है। मां भारती के लिए मर-मिटने का उनका जज्बा हर किसी को प्रेरित करने वाला है।
— Narendra Modi (@narendramodi) May 8, 2026
स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि |
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते || pic.twitter.com/FNuJ4tXyvX