Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – நியூசிலாந்து வெற்றிக் கூட்டணி என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

இந்தியா – நியூசிலாந்து வெற்றிக் கூட்டணி என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்


“இந்தியா-நியூசிலாந்து: ஒரு வெற்றிக் கூட்டணி” என்ற கருப்பொருளில், நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மதிய விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசியல், வணிகம், தொழில்துறை, கல்வித்துறை, தொழில்நுட்பம், விளையாட்டு, கலை ஆகிய துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தமது வரவேற்புரையில், நியூசிலாந்து பிரதமர் திரு லக்ஸன், இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஆழமான, நீடித்த உறவுகளை எடுத்துரைத்தார். மேலும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் பரஸ்பர செழிப்பை மேம்படுத்துவதற்குமான ஒரு பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையையும் சுட்டிக் காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பையும், மக்களுக்கு இடையேயான உறவுகளையும் குறிப்பிட்டார். இருதரப்பு உறவுகள் புத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டதை அவர் வரவேற்றார். மேலும், இது தற்போதைய ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சாதனை அளவில் குறைந்த நேரத்தில் முடிக்கப்பட்ட இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளிலும் உள்ள வணிகங்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய உதவும் என்றும் அவர் கூறினார்.

 

பிரமாண்டமான மதிய விருந்தைத் தொடர்ந்து, பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரதமர் திரு லக்ஸனும் நிகழ்விடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதுமையான விளையாட்டு உபகரணங்களைப் பார்வையிட்டனர். மேலும், அவர்கள் நியூசிலாந்தின் விருது பெற்ற விளையாட்டு வீரர்கள், உயர் செயல்திறன் விளையாட்டுகளுடன் தொடர்புடைய பிறருடனும் கலந்துரையாடினர். இரு தரப்பினருக்கும் இடையிலான 100 ஆண்டுகால விளையாட்டு ஈடுபாட்டை நினைவு கூர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தப் பயணத்தின் போது இறுதி செய்யப்பட்ட விளையாட்டு கூட்டு செயல் திட்டம், கிரிக்கெட்டைத் தாண்டி இரு நாடுகளின் உறவுகளை விரிவுபடுத்த உதவும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில், விளையாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்ற இரு தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்ப பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

****

(Release ID: 2283575)

TV/PLM/RJ