பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி , இன்று ‘போசிஷே போய்சாக்’ எனும் சிறப்பு நன்னாளையொட்டி, குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்குத் தனது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
குருதேவ் தாகூர் , மிகச்சிறந்த அறிவுத்திறன் கொண்ட ஒரு எழுத்தாளர், சிந்தனையாளர் மற்றும் கவிஞர் மட்டுமல்லாமல்; ஒரு தலைசிறந்த தத்துவஞானி, கல்வியாளர், கலைஞர் மற்றும் இந்தியாவின் நாகரிக ஆன்மாவின் காலத்தால் அழியாத குரலாகவும் முத்திரை பதித்தவர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதகுலத்தின் ஆழமான உணர்வுகளுக்கும், இந்தியப் பண்பாட்டின் உன்னதமான விழுமியங்களுக்கும் குருதேவ் தாகூர் வடிவம் கொடுத்தார் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான ஆற்றல் மற்றும் பண்பாட்டு நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு குருதேவ் சமூகத்தை வளப்படுத்தினார் என்றும் அவர் கூறியுள்ளார்.
குருதேவ் தாகூரை தேசம் ஆழ்ந்த மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூர்கிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார். குருதேவின் சிந்தனைகள் தொடர்ந்து மக்களின் மனங்களை ஒளிரச் செய்து, அவர்களின் முயற்சிகளுக்கு வழிகாட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார்:
“இன்று, ‘போசிஷே போய்சாக்’ எனும் சிறப்பு நன்னாளையொட்டி, நாம் குருதேவ் தாகூருக்கு நமது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்துகிறோம்.
குருதேவ் தாகூர் அவர்கள், மிகச்சிறந்த அறிவுத்திறன் கொண்ட ஒரு எழுத்தாளர், சிந்தனையாளர் மற்றும் கவிஞர் ஆவார். அவர் ஒரு தலைசிறந்த தத்துவஞானி, கல்வியாளர், கலைஞர் மற்றும் இந்தியாவின் நாகரிக ஆன்மாவின் காலத்தால் அழியாத குரலாகவும் முத்திரை பதித்துள்ளார். மனிதகுலத்தின் ஆழமான உணர்வுகளுக்கும், நமது பண்பாட்டின் உன்னதமான விழுமியங்களுக்கும் அவர் வடிவம் கொடுத்தார். புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான ஆற்றல், பண்பாட்டு நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு அவர் நமது சமூகத்தை வளப்படுத்தினார்.
நாம் அவரை ஆழ்ந்த மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூர்கிறோம். அவரது சிந்தனைகள் தொடர்ந்து மக்களின் மனங்களை ஒளிரச் செய்து, நமது முயற்சிகளுக்கு வழிகாட்டட்டும்.”
Release ID: 2259252
****
TV/PKV/SH
Today, on the special occasion of Pochishe Boishakh, we pay our heartfelt tributes to Gurudev Tagore.
— Narendra Modi (@narendramodi) May 9, 2026
Gurudev Tagore was a writer, thinker and poet of extraordinary brilliance. He made a mark as an exceptional philosopher, educationist, artist and a timeless voice of India’s…
আজ, পঁচিশে বৈশাখের এই বিশেষ দিনে, আমরা গুরুদেব ঠাকুরের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি।
— Narendra Modi (@narendramodi) May 9, 2026
গুরুদেব ঠাকুর ছিলেন এক অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিক, চিন্তক ও কবি। তিনি একজন অনন্য দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী এবং ভারতীয় সভ্যতার চিরন্তন কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত…