Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சோம்நாத்தில் இந்திய விமானப்படையின் சூரியக்கிரண் குழுவின் மெய்சிலிர்க்கும் சாசக நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார்


சோம்நாத் அம்ருத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் சூரியக்கிரண் குழுவின் மெய்சிலிர்க்கும் சாசக நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டுகளித்தார்.

வானில் பெருமிதமும் வீரமும் சூழ்ந்து, சோமநாதர் கோயிலின் மீது காவி மற்றும் மூவர்ணக் கொடியின் ஒளியைப் பரப்பியதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த அற்புதமான காட்சியும், பக்தி  மற்றும் சக்தி  ஆகியவற்றின் உணர்வும் ஒவ்வொரு மனதையும் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பச் செய்து, ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்ததாக திரு மோடி குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“சோம்நாத்தில் இன்று வானம் பெருமையுடனும் வீரத்துடனும்  சூழ்ந்து காணப்பட்டது.  இந்திய விமானப்படையின் சூரியக் கிரண் குழு மெய்சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சியை நடத்தியது. இந்தப் பக்தி மற்றும் சக்தியின் உணர்வு மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரது மனதிலும் நிரம்பியிருந்தது.

(Release ID: 2259808)

****

TV/IR/KPG/SH