Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எளிதான வாழ்வியல் முறை, வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம்


புதுதில்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்ற ஆக்கப்பூர்வமான விவாதங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

எளிமையான வாழ்வியல் முறை, வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்த சிறந்த நடைமுறைகள் மற்றும் கண்ணோட்டங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிகப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து எவ்வாறு திறம்பட மேற்கொள்வது என்பது குறித்து இந்த விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. எளிதான வாழ்வியல் முறை, வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கான நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்தும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கனவை நனவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகளை ஒன்றிணைந்து செயல்படுத்துவது குறித்தும் பரஸ்பரம் தங்களது கருத்துக்களையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொண்டோம்.”

***

(Release ID: 2263986

SS/SV/KPG/PD