Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங் சந்திப்பு


ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங்கை சந்தித்ததில் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம்  போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இந்திய-ஆஸ்திரேலிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்தும், விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

 

இந்த சந்திப்புப் பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியதாவது:

“ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம்  போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இந்திய-ஆஸ்திரேலிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்தும், விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை  உருவாக்குவதற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்  தொடர்ந்து பாடுபடும்.

@SenatorWong”

***

(Release ID: 2265613)        

TV/RB/RJ