பி.எம்.இந்தியா
ஒரு செயலைச் செய்வதில் திறமை மிக்கவர்கள் ஒருபுறம் இருக்க, அந்தத் திறமையை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் வல்லவர்கள் மறுபுறம் உள்ளனர். ஒரு பாடத்தையோ அல்லது திறமையையோ தானே முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அதை மற்றவர்களுக்கும் புரியும் வகையில் கற்றுக்கொடுக்கும் ஆற்றலும் கொண்டவரே மிகச்சிறந்த ஆசிரியர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு செயலைத் தானே திறம்படச் செய்பவர் ஒரு வகை, அந்தச் செயலை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் வல்லவர் மற்றொரு வகை. ஆனால், ஒரு விஷயத்தில் தானே தேர்ச்சி பெற்று, அதை மற்றவர்களுக்கும் சிறப்பாகக் கற்றுக்கொடுக்கும் திறன் கொண்ட ஒருவரே ஆசிரியர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுவார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267352®=3&lang=1
***
SS/VK/KR
श्लिष्टा क्रिया कस्यचिदात्मसंस्था सङ्क्रान्तिरन्यस्य विशेषयुक्ता।
— Narendra Modi (@narendramodi) June 1, 2026
यस्योभयं साधु स शिक्षकाणां धुरि प्रतिष्ठापयितव्य एव।। pic.twitter.com/xKT12kwrRt