பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, டாமனில் சுமார் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி இப்போது நாட்டின் பன்முகத்தன்மையைப் பெருமையுடன் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் டாமனில் வசிப்பது, ‘மினி இந்தியா’வின் உதாரணமாக மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
யூனியன் பிரதேசங்களின் நிர்வாக முன்னேற்றத்தில் திருப்தியை வெளிப்படுத்திய பிரதமர், டாமன், டையூ – தாத்ரா நகர் ஹவேலி முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பாராட்டினார். தாம் இங்கு வரும் ஒவ்வொரு முறையும், முந்தைய வருகையுடன் ஒப்பிடும்போது, இந்தப் பகுதி வளர்ச்சிப் பாதையில் பல மைல்கள் முன்னேறிவிட்டதாக உணர்வதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பகுதிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், போக்குவரத்து இணைப்பு வசதி, சுகாதாரம், கல்வி, சுற்றுலா, நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த வளர்ச்சிப் பணிகள் மக்களின் வாழ்க்கையை வெகுவாக எளிதாக்குவதோடு, இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்,” என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
உலகளாவிய நெருக்கடிகள் நிலவும் கடினமான காலகட்டத்திலும், 140 கோடி நாட்டு மக்களின் கூட்டு முயற்சியால், இந்தியா தன்னைத் தக்கவைத்துக்கொண்டு, முன்னணி நாடாகத் திகழ பாடுபடுகிறது என்று அவர் கூறினார்.
அனைத்து அரசு கட்டடங்களுக்கும் முழுமையாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் டையூவின் மகத்தான சாதனையை அவர் பெருமையுடன் எடுத்துரைத்தார். தற்போது நடைபெற்று வரும் மாபெரும் மரம் நடும் இயக்கங்களையும், சூரியசக்தி திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார். இப்பகுதியில் நடைபெற்று வரும் மாபெரும் தூய்மைப் பணிகளையும் அவர் பாராட்டினார்.
இந்தியாவின் விரிவான கடல்சார் உத்தியை அவர் எடுத்துரைத்தார். “உயர் இந்த முயற்சிகள் அனைத்தும், நீலப் பொருளாதாரத்தில் நாட்டின் வலிமையை கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
அரசின் மைய வளர்ச்சித் தத்துவத்தை வரையறுத்த பிரதமர், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மற்றும் டிஜிட்டல் சுகாதார இயக்கம் போன்ற முழுமையான சுகாதாரத் தலையீடுகள் மூலம் விளிம்புநிலை சமூகங்கள், ஏழைகள், பழங்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு முழு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். “இன்று, ஏழ்மையிலும் ஏழ்மையானவர்கள்கூட ஆயுஷ்மான் அட்டை வசதியையும், 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைக்கான உறுதியான உத்தரவாதத்தையும் பெற்றுள்ளனர்,” என்று திரு மோடி உறுதிப்படுத்தினார்.
ஆயுஷ்மான் அட்டை, மக்கள் மருந்தகங்கள் ஆகியவை மூலமாக ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் சுமார் இரண்டேகால் லட்சம் கோடி ரூபாயை வெற்றிகரமாகச் சேமித்துள்ளனர் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சில்வாசாவில் உள்ள நமோ மருத்துவமனையின் செயல்பாட்டையும், டாமனில் அதன் கிளை மருத்துவமனை திறக்கப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் இனி இன்னும் சிறந்த, மிகவும் மேம்பட்ட சுகாதார சேவையின் பலனைப் பெறுவார்கள் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
இந்த யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கல்வி மறுமலர்ச்சி குறித்து உரையாற்றிய பிரதமர், கல்வித் துறையில் இந்த யூனியன் பிரதேசம் படிப்படியாகவும் உறுதியாகவும் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளூர் இளைஞர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மீது தமக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார். மக்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு எப்போதும் தோளோடு தோள் சேர்ந்து உறுதியாக நிற்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269634®=3&lang=1
(Release ID : 2269634)
***
TV/PLM/SH
A new development push for Daman with the launch of projects across healthcare, aviation, tourism and infrastructure. These initiatives will transform lives across the Union Territory. https://t.co/KWFCZYEjHc
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
आज जो आंकड़े आए हैं, उन आंकड़ों से साफ है कि भारत की अर्थव्यवस्था की नींव कितनी मजबूत है।
— PMO India (@PMOIndia) June 5, 2026
वर्ष 2025-26 में भारत ने 7.7% की growth rate हासिल की है।
और पिछला quarter... जो 31 मार्च को खत्म हुआ, उसमें भी भारत की growth 7.8% रही है: PM @narendramodi
वैश्विक संकट के इस बुरे दौर में भी 140 करोड़ देशवासियों के सामूहिक प्रयासों से भारत, खुद को संभाल भी रहा है... लेकिन साथ-साथ सबसे आगे रहने में प्रयास सफल होते जा रहे हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 5, 2026
हमारी सरकार कैसे स्वास्थ्य को प्राथमिकता देते हुए चल रही है... इसका एक प्रमाण नेशनल फैमिली हेल्थ सर्वे के नतीजों में भी मिलता है।
— PMO India (@PMOIndia) June 5, 2026
एक समय, भारत में ज़्यादातर बच्चों की डिलिवरी अस्पताल में नहीं होती थी।
आज देश में 90 प्रतिशत से अधिक डिलिवरी अस्पतालों में हो रही है: PM…
मिशन इंद्रधनुष की वजह से बच्चों के टीकाकरण के क्षेत्र में भी भारत ने अच्छी प्रगति की है।
— PMO India (@PMOIndia) June 5, 2026
2014 से पहले केवल 60 प्रतिशत बच्चों का पूर्ण टीकाकरण हो पाता था।
आज यह आंकड़ा बढ़कर करीब 90 प्रतिशत तक पहुंच गया है: PM @narendramodi
I am honoured by the special welcome in Daman. The NDA Government has devoted significant resources for the development of Daman and Diu. Various projects have improved the quality of life for the people. pic.twitter.com/iavFDcDvJS
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
I would like to compliment the people of Daman for the outstanding Swachhata related endeavours in the run-up to today’s programme. When cleanliness is furthered, it boosts diverse sectors ranging from healthcare to tourism.
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
Here are some more glimpses from today’s welcome. pic.twitter.com/3xpEj5v8Gy
वैश्विक संकट के इस दौर में 140 करोड़ देशवासियों के सामूहिक प्रयासों से भारत खुद को संभाल भी रहा है और सबसे आगे रहने के उसके प्रयास सफल भी हो रहे हैं। देश की विकास गति को लेकर आज आए आंकड़े भी इसके गवाह हैं। pic.twitter.com/ZjCB0ikiuY
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
दादरा और नगर हवेली के साथ-साथ दमन और दीव में विकास की अनंत संभावनाएं हैं। यहां की जनता-जनार्दन प्रगति के जिस सपने को देख रही है, उसे साकार करने में हमारी सरकार निरंतर जुटी हुई है। pic.twitter.com/zn87TdQE7z
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
नेशनल फैमिली हेल्थ सर्वे के नतीजे इस बात के प्रत्यक्ष प्रमाण हैं कि आयुष्मान भारत सहित हेल्थ सेक्टर की हमारी योजनाएं देशवासियों के बहुत काम आ रही हैं। pic.twitter.com/aKQwD1mSSW
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
हमारी सरकार की कोशिश है कि देश के युवाओं को डिग्री के साथ-साथ सही दिशा भी मिले। इसलिए हर क्षेत्र में उन्हें नई अप्रोच के साथ ऐसे तैयार किया जा रहा है, ताकि लोकल टैलेंट के लिए ग्लोबल संभावनाएं भी बनें। pic.twitter.com/S24I8MJPq1
— Narendra Modi (@narendramodi) June 5, 2026