Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்


சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காண கூட்டான நடவடிக்கைக்கும் மக்கள் பங்கேற்புக்கும்  அழைப்பு விடுக்கின்ற உலக சுற்றுச்சூழல் தினம் குறித்த மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.06.2026) பகிர்ந்துள்ளார்.

நீடிக்கவல்ல, செலவு குறைவான, நீண்டகால சுற்றுச்சூழல் பயன்களை வழங்கத்தக்க இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் மூலம் இந்த  சவால்களை  எதிர்கொள்வது பற்றி அமைச்சர் அதில் குறிப்பிட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பொறுப்புத் தன்மையையும்  சமநிலைப்படுத்தும் இந்திய உறுதிபாட்டின் அடையாளமாக பசுமை மிகுந்த தில்லி இருக்கும் என்பதை மத்திய அமைச்சர் உறுதிபட தெரிவித்திருப்பதாக திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“உலக சுற்றுச்சூழல் தினத்தன்று நீடிக்கவல்ல, செலவு குறைவான, நீண்டகால சுற்றுச்சூழல் பயன்களை வழங்கத்தக்க இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் மூலம் சுற்றுச் சூழல்களை  எதிர்கொள்ள கூட்டான நடவடிக்கைக்கும் மக்கள் பங்கேற்புக்கும் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.  

வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பொறுப்புத் தன்மையையும்  சமநிலைப்படுத்தும் இந்திய உறுதிபாட்டின் அடையாளமாக பசுமை மிகுந்த தில்லி இருக்கும் என்பதை அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.”

***

 

(Release ID: 2269230

SS/SMB/KPG/SH