Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஏற்பட்ட விபத்து மிகுந்த மன வருத்தம் அளிப்பதாக உள்ளது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @ நரேந்திரமோடி”

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270403&reg=3&lang=1

***

(Release ID: 2270403)

TV/SV/SH