பி.எம்.இந்தியா
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் மக்களுடனும், அந்நாட்டு அரசுடனும் இந்தியா துணை நிற்கும் என்றும் திரு மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில் இன்று நேரிட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன். பிலிப்பைன்ஸ் மக்களுடனும், அந்நாட்டு அரசுடனும் இந்தியா துணையாக நிற்கிறது.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270398®=3&lang=1
(Release ID: 2270398)
****
TV/SV/SH
Saddened by the loss of lives and destruction caused by today’s earthquake in Mindanao, Philippines. My heartfelt condolences to the bereaved families and prayers for the speedy recovery of those injured. India stands in solidarity with the people and the Government of the…
— Narendra Modi (@narendramodi) June 8, 2026