Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிறந்த நிர்வாகத்தின் மிகப்பெரிய சோதனையாக பொதுச் சேவை திகழ்வதையும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


பொதுச் சேவை என்பது சிறந்த நிர்வாகத்தின் மிகப் பெரிய சோதனையாக திகழ்வதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். பணிவு, அர்ப்பணிப்பு, கடமை உணர்வுடன் தொடர்ந்து பணியாற்றுபவரே மக்களின் நம்பிக்கையை பெறுகிறார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“சேவையை புனிதக் கடமையாக கருதி மக்கள் நலனுக்காக அயராது உழைத்து சிறந்த நிர்வாகம் மூலம் அவர்களுடைய பாதுகாப்பு, நலனை உறுதி செய்து, பணிவு, சுய ஒழுக்கம், வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணிப்பவர் மக்களின் நம்பிக்கை, கௌரவம், அங்கீகாரம், வளமை ஆகியவற்றை உண்மையில் பெறுகிறார்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270984&reg=3&lang=1  

***

SS/IR/KPG/KR