பி.எம்.இந்தியா
இந்தியாவின் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்திச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக, ரூ.1,27,500 கோடி மதிப்பிலான, ‘செமிகான் 2.0′ திட்டத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கு தொடர்ச்சியான, நீண்டகால ஆதரவு தேவை என்பதை கருத்தில் கொண்டும் ‘செமிகான் 1.0′ திட்டத்தின் மூலம் ஏற்பட்ட விரைவான உற்பத்தித் திறனை தக்க வைத்து கொள்வதற்கும், உலகளவில் செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவை முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதை ‘செமிகான் 2.0′ நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘செமிகான் 2.0′ திட்டம் பின்வரும் ஆறு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான சூழல் அமைப்பை முழுமையாகக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது:
‘செமிகான் 2.0′ திட்டம், சிப் வடிவமைப்பில் ஏற்கனவே கிடைத்துள்ள தொடக்க நிலை வெற்றியை விரிவுபடுத்த உதவிடும். ஏற்கனவே 105 புத்தொழில் நிறுவனங்கள் சிப் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வடிவமைப்புச் சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். மேலும், உத்திசார் மற்றும் வணிக ரீதியான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான முக்கியக் கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்முறையைப் பின்பற்றி அறிவுசார் சொத்துக்கள், சிப் வடிவமைப்புகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதே ‘செமிகான் 2.0′-ன் நோக்கமாகும்.
செமிகண்டக்டர் உற்பத்திக்கான எந்திரங்கள், மூலப்பொருட்கள், ரசாயனங்கள், வாயுக்களின் உற்பத்தி & ஆராய்ச்சி மேம்பாட்டில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இது செமிகண்டக்டர் துறையின் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
முதலாவது உற்பத்தி ஆலை 2028-ல் செயல்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்திக்கான நடவடிக்கைகளின் மீது உலகம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. சிப் உற்பத்திக்கான ஆலைகளை அமைக்க அதிக உற்பத்தியாளர்களை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதில் சிலிக்கான் ஆலைகள், கூட்டு செமிகண்டக்டர் ஆலைகள், தனித்துவ பாகங்கள் தயாரிக்கும் ஆலைகள், காட்சித்திரை உற்பத்தி ஆலைகள் போன்றவை அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284784®=3&lang=1
***
SS/SV/KR
India’s semiconductor journey gets even more vibrant!
— Narendra Modi (@narendramodi) July 15, 2026
The Cabinet has approved Semicon 2.0 with an outlay of Rs. 1,27,500 crore, reaffirming our long-term commitment to making India a global centre for semiconductor design, manufacturing and innovation. Powered by our youth,…