பி.எம்.இந்தியா
இந்தியா – பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து, இது இந்தியா – பிரிட்டன் இடையேயான கூட்டாண்மையில் சிறந்த மைல்கல் என்று விவரித்துள்ளார். இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்தியா – பிரிட்டன் இடையே பொருளாதார தொடர்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் பகிரப்பட்ட இலக்குகளை தங்களுடைய மக்களுக்கான உறுதியான வாய்ப்புகளாக மாற்றும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சிறந்த துறைகளில் பிரிட்டன் சந்தைக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இந்திய விவசாயிகள், தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினருக்கு விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார். சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் பிரிட்டனில் தற்காலிகமாக பணி புரியும் இந்தியர்களுக்கு விலைமதிப்பில்லா ஆதரவை அளிக்கும் என்றும் இந்தியத் தொழில்துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“இந்தியா – பிரிட்டன் கூட்டாண்மையில் இது மிகச் சிறந்த தருணம்!
விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தம், சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் அமலுக்கு வருவதன் மூலம் நமது பொருளாதார உறவுகள் மேலும் வலுவடைய உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் நமது இரு நாடுகளின் பகிரப்பட்ட இலக்குகளை தங்களுடைய மக்களுக்கான உறுதியான வாய்ப்புகளாக மாற்றும்.
விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர் ஆகியோருக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். பல்வேறு சிறந்த துறைகளுக்கு பிரிட்டன் சந்தைக்கான வலுமையான அணுகல் வாய்ப்பு கிடைக்கும். தொழில்நுட்பம், தொழில்முறைச் சேவைகள், புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன் திறன்மிக்க இந்திய இளைஞர்களுக்கு சிறந்த ஆதரவையும் வழங்கும்.
சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம், பிரிட்டனில் தற்காலிகமாக பணி புரியும் இந்திய இளைஞர்களுக்கு விலைமதிப்பற்ற ஆதரவை அளிப்பதுடன் இந்தியத் தொழில்துறையின் போட்டித் தன்மையை வலுப்படுத்தும்.
இத்தருணம் நமது ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை மற்றும் வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றால் வழிநடத்தப்படும் எதிர்காலத்தை நோக்கிய கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவும் பிரிட்டனும் பகிரப்பட்ட வளமைக்காக தொடர்ந்து செயல்படும்.
***
(Release ID: 2284732)
SS/IR/KPG/KR
This is a significant moment in the India-United Kingdom partnership!
— Narendra Modi (@narendramodi) July 15, 2026
With the coming into force of the Comprehensive Economic and Trade Agreement and the Agreement on Social Security, our economic linkages are going to get even deeper. Together, these agreements translate our… https://t.co/6yZR0IUfCP