Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சண்டிகரில் ரூ.4700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

சண்டிகரில் ரூ.4700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்


சண்டிகரில் சுகாதார கவனிப்பு, கல்வி,  சாலை உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ரூ.4700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தப் பிராந்தியத்திற்கு சண்டி மாதாவின் தெய்வீக அருள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆளும் நிர்வாகத்தின் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட வளர்ச்சியின் அசைக்க முடியாத உறுதிப்பாடு உள்ளது என்றார். தேசத்தின் நீதிமுறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்த போது புதிய குற்றவியல் சட்டத்தின் அமலாக்கம் சண்டிகரிலிருந்துதான் தொடங்கியது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். இந்த நகரத்தை உயர் தொழில்நுட்பம் கொண்டதாக மாற்றுவதற்கு 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

உள்ளூர் மருத்துவமனையின் நவீன சுகாதார வசதிகளில் விரிவாக்கம் பற்றி அறிவித்த அவர், நரம்பு அறிவியல் மையம், தாய் சேய் மையம், முக்கிய சிகிச்சைக்கான பிரிவு உள்ளிட்டவை கூடுதலாக இணைக்கப்படுகின்றன என்று தெரிவித்தார். இந்த வசதிகள் லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்கும் என்று அவர் உறுதிபட கூறினார்.

கல்வி,  பொறியியல், மருத்துவ ஆய்வு நிறுவனங்களில் இந்நகரின் தனித்துவ கவனத்தைப் பாராட்டிய பிரதமர், இது புத்தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து வரும் மையமாகத் திகழும் என்றார். இந்தப் பயணத்தை விரைவுபடுத்த பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் குருஷேத்ரா மாணவர் விடுதியைத் தொடங்கி வைத்ததோடு புதிய ஆய்வாளர்களுக்கான விடுதிக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் இளைஞர்கள், சிறந்த சோதனைக் கூடங்களையும், நவீன ஆராய்ச்சிக்கு சிறந்தத் துறைகளையும் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டிருப்பதாக திரு மோடி கூறினார்.

தொழில்நுட்ப சாதனைகளை நிறைவேற்றுவதற்கு வலிமையான கல்விச்சூழல்கள் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இதில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், நவீனத் தொழில்நுட்பம் போன்றவற்றின் ஆராய்ச்சியில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறினார். தேசிய அளவிலான இந்த முக்கிய நோக்கத்தை உள்ளூர் கல்வியாளர்களும் மாணவர்களும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற தமது அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.  ஆராய்ச்சிச் சூழல் உண்மையில் வலுவாக இருக்கும் போதுதான் புதிய கண்டுபிடிப்பு வேகம் பெறும் என்று திரு மோடி கூறினார்.

வலுவான உள்கட்டமைப்பு பொருளாதார வளத்திற்கு முன்னோட்டம் என்று குறிப்பிட்ட பிரதமர், அரசின் புதிய முழு மொத்த வளர்ச்சி அணுகுமுறையை எடுத்துரைத்தார். இதன் ஒரு பகுதியாக விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஏதுவாக ஐடி நகர் முதல்  குராலி வரை 6 வழி பசுமை வழித்தடத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

பிராந்திய இணைப்பை விரிவுபடுத்தும் வகையில், ஜலந்தரில் ரயில்வே திட்டங்கள் தொடங்கப்படுவது பற்றி அறிவித்த பிரதமர், ஜிண்டிலிருந்து  சோனிபட்டை இணைக்கும் வகையில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார்.  நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தற்போதைய நிறுவனங்கள் வரும் தலைமுறைகளுக்கு சேவை செய்யும் என்று பஞ்சாப், அரியானா, சண்டிகர் மக்களுக்கு  அவர் உறுதியளித்தார். வரவிருக்கும் தலைமுறைகளுக்கு அதிகபட்ச பயனளிக்கும் வகையில், இத்தகைய துணிச்சலான முடிவுகளை நாம் உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285808&reg=3&lang=1

****

TV/SMB/KPG/SH