பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.23,731 கோடி நிதி ஒதுக்கீட்டில் தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டத்திற்கு (கோபர்தன்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தூய்மையான எரிசக்திப் பயணத்தில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். வேளாண்மைக் கழிவுகள், சாணம், நகர்ப்புறக் கழிவுகள் உள்ளிட்டவற்றைத் தூய்மையான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருவாயாக மாற்ற இத்திட்டம் வழிவகுக்கும்.
2026-27 நிதியாண்டு முதல் 2035-36 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், உயிரிஎரிவாயு உற்பத்தியை நாட்டின் எதிர்கால எரிசக்திக் கட்டமைப்பின் முக்கியத் தூணாக மாற்றும். மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இத்திட்டம், உள்நாட்டு உற்பத்தியைப் பத்து மடங்கு வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
‘கழிவுகள் நாட்டின் வளர்ச்சிக்கான எரிபொருளாகும்; கிராமங்கள் தூய்மை ஆற்றல் உற்பத்தியின் மையங்களாகும்; விவசாயிகள் எரிசக்திப் பாதுகாப்பின் பங்காளிப்பாளர்களாவர்’ என்ற தொலைநோக்குப் பார்வையை இத்திட்டம் பிரதிபலிக்கிறது.
இத்திட்டம் வளர்ச்சிக்கான ஆறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. உற்பத்தி செய்யப்படும் உயிரிஎரிவாயுவை நகர்ப்புற எரிவாயு விநியோக நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்தல், சர்வதேச அளவில் நிலையான விலையை நிர்ணயித்தல், புதிய திட்டங்களுக்குத் திறன் அடிப்படையில் மூலதன நிதியுதவி வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். மேலும் குழாய் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் உத்தரவாதம் அளித்தல், மாவட்ட அளவில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தச் சிறப்பு நிதியம் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதுடன், கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கும் சிறிய அளவிலான தொழில்முனைவோருக்கும் புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்கும். பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்து, இயற்கை உரப் பயன்பாட்டை அதிகரித்து, இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் தேவைகளைக் குறைப்பதன் மூலம் தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295480®=3&lang=1
***
TV/PD/SE
A vital step towards clean energy, rural prosperity and realising our collective dream of an Atmanirbhar Bharat!
— Narendra Modi (@narendramodi) August 6, 2026
The Cabinet has approved GOBARdhan Scheme, which will give a major boost to Compressed Biogas, with the aim of increasing domestic CBG production nearly ten-fold. The…