Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 செப்டம்பர் 5) மாலை 7 மணிக்கு நடைபெறும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி, இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், வணிகம், பொருளாதாரம், மேலாண்மை ஆகிய துறைகளில் ஒரு புகழ்பெற்ற கற்றல் மையமாகவும் திகழ்கிறது. புகழ்பெற்ற தொழிலதிபரும் கொடையாளருமான சர் ஸ்ரீ ராம் என்பவரால் 1926-ல் நிறுவப்பட்ட இக்கல்லூரி, ஒரு நூற்றாண்டு காலத்தில், பல அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள், நிர்வாகிகள், தொழில்முனைவோர், கொள்கை வகுப்பாளர்கள் என பலரை உருவாக்கியுள்ளது.

நூற்றாண்டு விழா ஆசிரியர் தினத்துடன் இணைந்து வரும் நிலையில் தலைமுறைகளை வடிவமைப்பதிலும் சமூகத்தின் அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும் ஆசிரியர்களின் பங்களிப்பை கௌரவிக்கும்  விதத்தில் இந்நிகழ்வு அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2306742&reg=3&lang=1

SS/PLM/SH