Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வதோதராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

வதோதராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து தாம் உரையாற்றிய நிகழ்வின் சிறப்பம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:

“2,800 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட பிரத்யேக சரக்கு போக்குவரத்து பாதையின் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இது பிரதமரின் கதி சக்தி திட்டத்திற்கும், இந்திய தளவாடத் துறையின் உருமாற்றத்திற்கும் கிடைத்த ஒரு முக்கிய மைல்கல்லாகும்.”

இந்தியா உருவாக்கி வருகிறது:

மைக்ரோசிப்கள் முதல் கப்பல்கள் வரை… முழுமையான மதிப்புச் சங்கிலி அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்கி வருகிறது.

சூரிய சக்தி முதல் அணு ஆற்றல் வரை… செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள் மற்றும் எதிர்காலத் தொழில்துறைக்கான ஆற்றல் சூழலமைப்பை உருவாக்கி வருகிறது.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307919&reg=3&lang=1

***

TV/SE/RJ