பி.எம்.இந்தியா
இந்தியாவின் தலைமையில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (12.09.2026) புது தில்லியில் எத்தியோப்பியா பிரதமர் திரு டாக்டர் அபி அகமது அலியைச் சந்தித்தார்.
இருதரப்பு உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். 2025 டிசம்பரில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிஸ் அபாபாவிற்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு அமைந்தது.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்து தங்களது கண்ணோட்டங்களைப் பரிமாறிக் கொண்டனர். பலதரப்பு மன்றங்களில் நெருங்கிய ஒத்துழைப்புக்கான தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் எத்தியோப்பியா பங்கேற்றதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்ததோடு, அதன் பங்கேற்பு உலகத் தெற்கு நாடுகளின் குரலை வலுப்படுத்த உதவும் என்று குறிப்பிட்டார்.
(Release ID : 2309380)
TV/PLM/SH
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309380®=48&lang=1
(Release ID : 2309380)
****
TV/PLM/SH