Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசியப் பிரதமருடன் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி,  இன்று (2026 செப்டம்பர் 12) புது தில்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, மலேசியப் பிரதமர் திரு டத்தோ செரி அன்வர் பின் இப்ராஹிமிடன் இருதரப்புப் பேச்சு நடத்தினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி, மலேசிய பிரதமர் திரு இப்ராஹிமை இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்றதோடு, பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஒரு கூட்டாளர் நாடாக மலேசியா பங்கேற்பதையும் பாராட்டினார். 2026 பிப்ரவரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் பலன்களைத் தலைவர்கள் ஆய்வு செய்ததோடு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, செமி கண்டக்டர், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், எரிசக்தி, நிதித் தொழில்நுட்பம், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தனர். மலேசியாவின் சபா மாகாணத்தின் கோட்டா கினபாலு பகுதியில் இந்தியத் துணைத் தூதரகம் அமைப்பதற்கு மலேசியாவின் ஒப்புதலை அந்நாட்டு பிரதமர் திரு அன்வர் இப்ராஹிம் வழங்கினார்.

 

ஆசியான்-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார். பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா-மலேசியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309382&reg=3&lang=1

(Release ID: 2309382)

****

TV/PLM/SH