பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (2026 செப்டம்பர் 13) புதுதில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, தென்னாப்பிரிக்கக் அதிபர் திரு சிரில் ராமபோசாவைச் சந்தித்தார்.
இரு தலைவர்களும் ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன், இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான பன்முக உத்திசார் ஒத்துழைப்பு குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான நெருங்கிய நீண்டகால உறவுகள், பகிரப்பட்ட வரலாற்றுப் போராட்டங்கள், வலுவான கலாச்சாரப் பிணைப்புகள், உறுதியான பொருளாதாரத் தொடர்புகள், மக்களுக்கு இடையேயான இணைப்புகள் ஆகியவற்றில் வேரூன்றியுள்ளன என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர். இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், பலதரப்பு மன்றங்களில் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணவும் ஒப்புக்கொண்டனர். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சிறுத்தைகள் வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில், சர்வதேசப் பெரிய பூனைகள் கூட்டமைப்பில் சேருவது குறித்துப் பரிசீலிக்குமாறு பிரதமர் தென்னாப்பிரிக்காவிற்கு அழைப்பு விடுத்தார்.
தமக்கும் தமது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும், பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்கும் பிரதமர் திரு நரேந்தர மோடிக்கு தென்னாப்பிரிக்கா அதிபர் திரு சிரில் ரமபோசா நன்றி தெரிவித்தார்.
***
(Release ID: 2309803)
TV/PLM/RJ
PM @narendramodi met South African President @CyrilRamaphosa on the sidelines of the BRICS Summit in Delhi. They reviewed the India-South Africa Strategic Partnership. The discussions covered trade, critical minerals, infrastructure, food security, digital technologies and… pic.twitter.com/cxUIDV5AGe
— PMO India (@PMOIndia) September 13, 2026
Delighted to meet President Cyril Ramaphosa on the sidelines of the BRICS Summit in Delhi.
— Narendra Modi (@narendramodi) September 13, 2026
We reviewed the full breadth of the India-South Africa Strategic Partnership including:
The India-SACU trade agreement.
Mining and critical minerals.
Infrastructure.
Food security.… pic.twitter.com/8NcemThBdq