Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொறியாளர்கள் தினத்தையொட்டி, பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


பொறியாளர்கள் தினத்தையொட்டி, அனைத்து பொறியாளர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாளைய தினத்தை சிறப்பாக உருவாக்கும் வகையில் கட்டமைப்பு, புதுமைக் கண்டுபிடிப்பு, தீர்வுகளை கண்டறிவது ஆகியவற்றில் பொறியாளர்களின்  சிறந்த பங்களிப்பை திரு மோடி பாராட்டியுள்ளார்.

தமது மகத்துவமான பொறியியல் திறனாலும், நாட்டை கட்டமைக்கும் தொலைநோக்கு பார்வையாலும் பல தலைமுறை பொறியாளர்களுக்கு உத்வேகம் அளித்து வரும் சர் எம். விஸ்வேஸ்வரய்யாவுக்கும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

நாளைய தினத்தை சிறப்பாக உருவாக்கும் வகையில் கட்டமைப்பு, புதுமைக் கண்டுபிடிப்பு, தீர்வுகளை கண்டறிவது ஆகியவற்றில் பங்களிப்பை வழங்கும் அனைத்து  மகத்துவமான பொறியாளர்களுக்கும் மகிழ்ச்சிகரமான பொறியாளர் தின வாழ்த்துகள்.

தனது பொறியியல் திறனாலும் நாட்டைக் கட்டமைக்கும் தொலைநோக்கு பார்வையாளும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் சர் எம். விஸ்வேஸ்வரய்யாவுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

***

Release ID: 2310316

TV/IR/PS/GS