Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போட்டித்தன்மை வாய்ந்த ஜவுளித் தொழிலை உருவாக்கும் முயற்சிகளைப் பிரதிபலிக்கும் ஒரு கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


ஜவுளி மறுசுழற்சி, தூய்மையான உற்பத்தி, பசுமைத் தொழில்நுட்பங்கள் தொடர்பான முன்முயற்சிகள் ஆகியவை போட்டித்தன்மை வாய்ந்த ஜவுளித் துறையைக் கட்டமைக்க எவ்வாறு உதவுகின்றன என்பதை எடுத்துரைக்கும், மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நிலைத்தன்மை என்பது நீண்ட காலமாக இந்தியாவின் நெறிமுறைகளின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது என்றும், அதுவே இப்போது நமது ஜவுளித் துறையின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நிலைத்தன்மை என்பது நீண்ட காலமாக இந்தியாவின் நெறிமுறைகளின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. அது தற்போது நமது ஜவுளித் துறையின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது.

இந்தக் கட்டுரையில், ஜவுளி மறுசுழற்சி, தூய்மையான உற்பத்தி, பசுமைத் தொழில்நுட்பங்கள் தொடர்பான முயற்சிகள் ஆகியவை, சுழற்சி முறையிலான, போட்டித்தன்மை வாய்ந்த ஒரு ஜவுளித் தொழில்துறையைக் கட்டமைக்க எவ்வாறு உதவுகின்றன என்பதை மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் எடுத்துரைத்துள்ளார்.”

****

SS/PLM/RJ