Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ பேஜாவர அதோக்ஷஜ மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிஜி, பிரதமருடன் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ பேஜாவர அதோக்ஷஜ மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிஜியையும்,  இதர முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்தார்.

 

பத்ம விபூஷண் யதிகுல சக்ரவர்த்தி ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிஜியின் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினையைப் பிரதமர் வெளியிட்டார். பக்தி, கல்வி மற்றும் சேவை நிறைந்த அவரது வாழ்க்கை, எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாக திரு மோடி குறிப்பிட்டார். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள், அவரது உன்னதமான கொள்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“உடுப்பி ஸ்ரீ பேஜாவர அதோக்ஷஜ மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிஜியையும், இதர முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்தேன்.

பத்ம விபூஷண், யதிகுல சக்ரவர்த்தி ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிஜியின் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினையை வெளியிட்டேன். பக்தி, கல்வி மற்றும் சேவை நிறைந்த அவரது வாழ்க்கை, எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பல்வேறு முன்முயற்சிகள், அவரது உன்னதமான கொள்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313656&reg=3&lang=1

****

TV/BR/SH