Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த தினத்தையொட்டிப் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்


பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர்  திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.  

அவரது தொலைநோக்குப் பார்வையான ஏழைகள், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு ஆகியவை நாட்டைக் கட்டமைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை கருத்தில் கொண்டு, சமூக, தேசிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அனைவரையும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்தத் தினத்தில் அதிர்ஷடத்தைக் காட்டிலும் தொடர் முயற்சி, துணிச்சலான நடவடிக்கைகள் வெற்றிக்கும், புத்தாக்கத்திற்கும் காரணியாக அமைகின்றன என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்ட ஒருவர் விரைவாக வெற்றியை அடைகிறார். புத்தாக்கமும், தொடர் முயற்சியின் அடிப்படையில் அமைகிறது. எனவே, அதிர்ஷ்டத்தை விட, அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு, துணிச்சல், புதிய யோசனைகள், மன உறுதி ஆகியவையே வெற்றி மற்றும் புத்தாக்கத்திற்கு வழிவகுக்கின்றன.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314664&reg=3&lang=1

***

SS/SV/RJ/SH