குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்தை 2031-ம் ஆண்டு மார்ச் 31 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனம் மூலம் கடன் அளிக்கும் நிறுவனங்களுக்கு வாராக்கடன் அபாயத்திற்கு எதிரான உத்திரவாத்தை அளிக்கிறது.
பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2026 செப்டம்பர் வரை கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் ரூ.60.36 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.43.34 லட்சம் கோடி ஆகும். 2016 ஜனவரியில் தொடங்கப்பட்ட குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியம் பிரதமரின் முத்ரா திட்டக் கடன்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய குறு நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகிறது. பிரதமரின் ஜன்தன் கணக்குகளின் கீழ் வங்கியால் அளிக்கப்படும் ரூ.10,000 வரையிலான கூடுதல் கடன் வசதி, சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான கடன் வசதி அளிக்கப்படும். கடன் வழங்கும் நிறுவனங்களின் உரிய அபாய அளவை பிரதிபலிக்கும் வகையில் செயல்பாட்டு மூலதன வரம்புகளுக்கு அளிக்கப்பட்ட தொகையுடனும், காலக் கடன்களுக்கு நிலுவையில் உள்ள தொகைகளுடனும் இந்த உத்தரவாத பாதுகாப்பு இணைக்கப்பட்டுள்ளது.
உத்தரவாத கட்டணம் ஆண்டுக்கு 1 சதவீதத்திலிருந்து 0.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்களுக்கு எந்த மாற்றமும் கிடையாது. இத்திட்டம் 16-வது நிதிக்குழு செயல்பாட்டில் இருக்கும்போது அதாவது நிதியாண்டு 2026-27 முதல் 2030-31 வரை பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து கடன்களுக்கும் பொருந்தக்கூடியதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334976®=3&lang=1
***
SS/IR/PS/SH